"மக்களின் குரலை கேட்க பா.ஜ.க. விரும்பவில்லை" - பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பா.ஜ.க. எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு வெறுப்பை தான் விதைத்து வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மக்களின் குரலை கேட்க பா.ஜ.க. விரும்பவில்லை - பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
பா.ஜ.க. எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு வெறுப்பை தான் விதைத்து வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். குவகாத்தியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி அசாம் மாநிலத்தில் மாணவர்கள் போராடி வருகின்றனர் என்றும் மற்ற மாநிலங்களிலும் இதே நிலை தான் உள்ளதாகவும் அவர் கூறினார். போராடுபவர்கள் மீது ஏன் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொல்கிறீர்கள் என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், பா.ஜ.க. அரசு மக்களின் எண்ணங்களை மற்றும் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமெடுக்க தயாராக இல்லை என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்