ஆளுநருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு - நாளை முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவி ஏற்க உள்ள நிலையில் இன்று காலை ஆளுநரை சந்தித்து பேசினார்.
ஆளுநருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு - நாளை முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே
x
பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டு கூட்டத்தில் புதிய முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாளை மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் இன்று காலை ஆளுநர் பகத்சிங்கை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.  அப்போது உத்தவ் தாக்கரேவின் மனைவி ரேஷ்மியும் உடன் இருந்தார். 


Next Story

மேலும் செய்திகள்