"வரும் தலைமுறைக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?" - பா.ஜ.க. அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

உலகில் வளர்ச்சி பற்றி பேசும் எந்த அரசாவது, பள்ளிக்கு குழந்தைகள் செல்வதை தடுத்தது உண்டா? என மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் தலைமுறைக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன? - பா.ஜ.க. அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி
x
உலகில் வளர்ச்சி பற்றி பேசும் எந்த அரசாவது, பள்ளிக்கு குழந்தைகள் செல்வதை தடுத்தது உண்டா? என  மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு, காஷ்​மீரில் கடந்த 2 மாதமாக தொடரும் கட்டுப்பாடுகளால், அப்பாவி குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமது பதிவில் பிரிய​ங்கா காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். பள்ளி மற்றும் தங்களது நண்பர்களுடனான தொடர்பை பா.ஜ.க. அரசின் நடவடிக்கை துண்டித்து உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்​. மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள், எத்தகைய செய்தியை, ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் தலைமுறைக்கு அளித்துள்ளது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்