பொருளாதார வளர்ச்சி பற்றி அமைச்சர் பியூஸ்கோயல் கருத்து - யதார்த்த நிலை மீது கவனம் செலுத்த யெச்சூரி வலியுறுத்தல்

ஊடகங்களில் வரும் கணக்குகள் போலான கணக்குகள் புவிஈர்ப்பு விசை தத்துவத்தைக் கண்டுபிடிப்பதில் ஐன்ஸ்டீனுக்கு உதவவில்லை என மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்திருந்தார்.
பொருளாதார வளர்ச்சி பற்றி அமைச்சர் பியூஸ்கோயல் கருத்து - யதார்த்த நிலை மீது கவனம் செலுத்த யெச்சூரி வலியுறுத்தல்
x
பொருளாதார வளர்ச்சி தொடர்பாக ஊடகங்களில் வரும் தகவல்களை நம்பவேண்டாம் என்றும், ஊடகங்களில் வரும் கணக்குகள் போலான கணக்குகள் புவிஈர்ப்பு விசை தத்துவத்தைக் கண்டுபிடிப்பதில் ஐன்ஸ்டீனுக்கு உதவவில்லை என மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்திருந்தார். இதற்கு சமூக வலைதளம் உள்பட பல்வேறு நிலைகளில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், யதார்த்த நிலை மீது கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்