காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து விதிகளையும் மீறியுள்ளது மத்திய அரசு - அதிர்ரஞ்சன் சவுத்ரி

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை பறித்தது மற்றும் அதனை இரண்டாக பிரித்தது உள்பட அனைத்து விசயங்களிலும், எல்லா விதிமுறைகளையும் பா.ஜ.க. அரசு மீறியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து விதிகளையும் மீறியுள்ளது மத்திய அரசு - அதிர்ரஞ்சன் சவுத்ரி
x
மக்களவையில், நடைபெற்ற விவாதத்தில் கலந்த கொண்டு பேசிய, காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்ரி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அரசுக்கு எண்ணம் உள்ளதாக தெரியவில்லை என தெரிவித்தார். அனைத்து விதிமுறைகளையும் மீறி அரசு, காஷ்மீர் மாநிலத்தை ஒரே இரவில் யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து உள்நாட்டு பிரச்சனை என அரசு கூறுகிறது, ஆனால் காஷ்மீர் பிரச்சனையை 1948 முதல் ஐ.நா. கண்காணித்து வருவதாக  அதிர்ரஞ்சன் சவுத்ரி சுட்டிக்காட்டினார்.  

, உள்நாட்டு பிரச்சனையாக இருந்தார் நாம் ஏன் சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம், லாகூ:ர பிரகடனணம் வெளியிட்டோம் என் கேள்வி எழுப்பினார்.  உள்நாட்டு பிரச்சனை மற்றும் இருதரப்பு பிரச்சனை என்ன என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் சவுத்ரி வலியுறுத்தினார். மேலும், அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர், காஷ்மிர், இருதரப்பு பிரச்சனை என்றும், அதில் தலையிட வேண்டாம் என கூறியதை மேற்கோள்காட்டி, இது உள்நாட்டு பிரச்சனைாய என அறிய விரும்புவதாகவும், ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் அறிய விரும்புவதாகவும், இது தொடர்பாக தங்களுக்கு தெளிவாக விளங்கும்படி விளக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, அதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தினார். அதற்கு பா.ஜ.க. எம்.பி..க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் முழக்கம் எழுப்பியதால் அமளி உருவானது.


Next Story

மேலும் செய்திகள்