இந்தி திணிப்பை அ.தி.மு.க அரசு ஏற்காது - தங்கம் தென்னரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் அ.தி.மு.க அரசு இந்தி திணிப்பை ஏற்காது என சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் அ.தி.மு.க அரசு இந்தி திணிப்பை ஏற்காது என சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு தொடர்பாக தி.மு.க சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பேசிய தி.மு.க உறுப்பினர் தங்கம் தென்னரசு, தபால் துறை தேர்வுகளை தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்தி திணிப்பை அ.தி.மு.க அரசு ஏற்காது என உறுதி அளித்தார்.
Next Story