அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - பியூஷ் கோயல் நம்பிக்கை
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக  கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநில விவசாயிகள் அதிக  பயன் பெறுவர் என்றும் அவர் கூறினார். 3 தலைமுறைகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி நாட்டில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்