காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் : தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது குறித்து ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காரிய கமிட்டிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் : தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது குறித்து ஆலோசனை
x
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், மல்லிகார்ஜூனகார்கே, கே.சி.வேணூகோபால், டெல்லி முன்னாள் முதலவர் ஷீலா தீட்சித், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது,தேர்தல் பிரசாரம் மற்றும் வியூகம் உள்ளிட்டவைகளை, வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி, இந்தியாவில் உள்ள ஏழை குடும்பங்களில் 20 சதவிகிதம் குடும்பங்களுக்கு குறைந்த பட்ச வருமானமாக, ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் பெற காங்கிரஸ் கட்சி உறுதி செய்யும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்