'செளகிதார்' வார்த்தையை முன்வைத்து அரசியல்

செளகிதார் என்ற வார்த்தையை முன்வைத்து பாஜக தனது பிரசாரத்தை முன்வைத்துள்ள நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
செளகிதார் வார்த்தையை முன்வைத்து அரசியல்
x
செளகிதார் என்ற வார்த்தையை முன்வைத்து பாஜக தனது பிரசாரத்தை முன்வைத்துள்ள நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

நாட்டின் பாதுகாவலன் நான் என்பதை குறிக்கும் வகையில் செளகிதார் என்ற வார்த்தையை பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்தார். அதன்பிறகு பாஜகவினரால் மோடி செளகிதார் என்றே அழைக்கப்பட்டார். ஆனால் இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. நாட்டின் பாதுகாவலனே கள்வனாக இருப்பதா? என்பதை குறிக்கும் வகையில் செளகிதார் சோர் ஹை என்ற வாசகத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது.. 

ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு செளகிதார் என்ற வார்த்தையை பாஜகவினர் இன்னும் தீவிரமாக கொண்டு  சென்றனர். அதன் முதற்கட்டமாக பாஜகவினர் தங்கள் ட்விட்டர் கணக்கில் தங்கள் பெயருக்கு முன்னால் செளகிதார் என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொண்டனர். இதற்கும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ரபேல் ஆவணங்கள் மாயமானதாக பாஜக அரசு கூறும் நிலையில் அவர்கள் எப்படி நாட்டின் பாதுகாவலனாக இருக்க முடியும் என்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது... 

சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் இதனை விமர்சனம் செய்து பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்... 

Next Story

மேலும் செய்திகள்