மம்தா கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் கொல்கத்தா பயணம்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா செல்கிறார்.
மம்தா கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் கொல்கத்தா பயணம்
x
நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதற்காக, எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு, மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, கொல்கத்தாவில் நாளை 19ம் தேதி, இந்த கூட்டம் நடைபெறுகிறது. மம்தா அழைப்பை ஏற்று, இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக இன்று அவர் கொல்கத்தா புறப்பட்டு செல்கிறார். இந்த கூட்டத்தில் சரத்யாதவ், பரூக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெ​ஜ்ரிவால், குமாரசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்