"அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், 

* குட்கா வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை விடுவிக்கும் உள்நோக்கத்துடன், சி.பி.ஐ அமைப்பின் விசாரணை திசை திரும்புகிறதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக கூறினார். 

* சி.பி.ஐ. ரெய்டு நடத்திய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்றும், 

* இந்த வழக்கில் இருந்து அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் விடுவிக்கும் நோக்கில் விசாரணையின் பாதை தலைகீழாக மாறுமேயானால் திமுக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவதற்குத் தயங்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

* எனவே சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றும், டி.ஜி.பி. ராஜேந்திரன் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்