புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதித்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஆய்வு
x
ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கார் மூலம் மாப்பிள்ளையார்குளத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். புயல் பாதிப்பில் இறந்த 9 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர், தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர்களிடம் கொடுத்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி பொருட்களை முதலமைச்சர் வழங்கினார். பின்னர் பேசிய அவர், கேரள மாநிலத்தை போல், தமிழக எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.  நிவாரண உதவி வழங்க வரும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். 

புயலில் சேதம் அடைந்த தென்னை மரங்கள் - நேரில் பார்வையிட்டார் முதலமைச்சர் பழனிசாமி 
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் பார்வையிட்டார். ஏக்கர் கணக்கில் சேதம் அடைந்த தென்னை மரங்களை பார்வையிட்ட அவர், நிவாரண பணி மற்றும் கணக்கீடு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். புயல் பாதிப்பால் பட்டுக்கோட்டையில் இறந்த 5 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர், தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். முற்றிலும் வீடுகளை இழந்த ஐந்து பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். 


முதலமைச்சரின் பயணம் பாதியிலேயே ரத்து 
புயல் பாதித்த நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாதியிலேயே திரும்பினார். அங்கு கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலை நிலவுகிறது. இதனை தொடர்ந்து, பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சிக்கு திரும்பினார். 




Next Story

மேலும் செய்திகள்