மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வியூகம்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேவகவுடா மற்றும் குமாரசாமியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வியூகம்
x
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்த, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வியூகம் வகுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, இன்று பெங்களூரு பத்மநாபா நகரில் உள்ள முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேவகவுடாவை சந்திரபாபு நாயுடு சந்தித்தார். கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்ட கட்சி முன்னோடிகள் உடனிருந்தனர். 

சந்திரபாபு நாயுடுவை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தேவகவுடா அவருக்கு நினைவு பரிசும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோற்கடிப்பது மற்றும் வலுவான கூட்டணி அமைப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர். இதையடுத்து நாளை சென்னை வரும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு  எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச இருக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்