திமுக தலைவர் ஆகிறார், ஸ்டாலின்: வரும் 28ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு

ஒரு நபர் 2 பதவிகளில் இருக்க கூடாது என்ற பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பை ஸ்டாலின் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.
திமுக தலைவர் ஆகிறார், ஸ்டாலின்: வரும் 28ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு
x
ஒரு நபர் 2 பதவிகளில் இருக்க கூடாது என்ற பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பை ஸ்டாலின் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.அந்த வரிசையில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படும் போது, பொருளாளர் பதவியில் நீடிக்க முடியாது. 

இதனால் பொதுக்குழு கூட்டத்தில் புதிய பொருளாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு முன், திமுகவின் பொதுச்செயலாளராக அண்ணா இருந்த போது, கருணாநிதி பொருளாளராக இருந்தார். 

அதன் பின்னர், எம்.ஜி.ஆர், சாதிக் பாட்ஷா ஆற்காடு வீராசாமி ஆகியோர் திமுகவின் பொருளாளராக இருந்தனர். பின்னர், பொருளாளர் பதவிக்கு வந்த ஸ்டாலின், தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால், திமுகவின் அடுத்த பொருளாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்