சோனியா காந்தி,ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்க உள்ளார்.
சோனியா காந்தி,ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்
x
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்க உள்ளார்.தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், பிரதமர் மோடியை நேற்று மாலை சந்தித்தார். அப்போது, தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேச இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்