அதிகரித்து வரும் கொரோனா தொற்று; எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம்? - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில், 83 சதவீதம் பேர் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா தொற்று; எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம்? - மத்திய அரசு தகவல்
x
நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில், 83 சதவீதம் பேர் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில், 83 சதவீதம் பேர் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், 
மேற்கூறிய மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நபர்கள், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 9 மாநிலங்களில், தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், அசாம், ஒடிசா, கர்நடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் தினசரி பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், 71 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டில் இன்று பதிவாகியுள்ள மொத்த கொரோனா உயரிழப்புகளில், 73 சதவீதம் பேர் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்