அனைத்துவித பட்டாசுகளுக்கும் நவம்பர் 7 முதல் 30 வரை தடை உத்தரவு

டெல்லியில் நவம்பர் 7ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அனைத்துவித பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.
அனைத்துவித பட்டாசுகளுக்கும் நவம்பர் 7 முதல் 30 வரை தடை உத்தரவு
x
டெல்லியில் நவம்பர் 7ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அனைத்துவித பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். டெல்லியில் 3வது கொரோனா அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்துவருவதாகவும், தற்போது 8 ஆயிரத்து 572 கொரோனா படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதகாவும் அவர் கூறினார். மேலும் கொரோனா படுக்கைகளை அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

"காஷ்மீரில் பாகிஸ்தான் மறைமுகப் போர்" - தலைமை ராணுவத்தளபதி பிபின் ராவத் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் மறைமுக யுத்தத்தை நடத்தி வருவதாக இந்திய தலைமை ராணுவத்தளபதி பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழா நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஆயுதமேந்தி இஸ்லாமிய கிளர்ச்சியையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிப்பதாக கூறினார். தற்போது சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பும் பாகிஸ்தான், காஷ்மீரின் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

பிரிவினைவாத கும்பலிடம் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் மீட்டு வரக்கோரிய மனு ஒத்திவைப்பு

ஏமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கக் கோரிய வழக்கை, உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த பொறியாளர் மணிராஜ் உள்ளிட்ட 14 பேர், ஏமனைச் சேர்ந்த ஷிதா ஷியா ஹவுதி என்ற பிரிவினைவாத கும்பலிடம் சிக்கியுள்ளனர். அவர்களை தாயகம் மீட்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, மணிராஜின் மனைவி வேல்மதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், வழக்கு விவரங்களை மத்திய அரசு வழக்கறிஞரிடம் வழங்க அனுமதி அளித்தனர்.  

எம்.எல்.ஏ வீடு, வணிக வளாகம் இடிப்பு சிறப்பு நீதிமன்ற உத்தரவை மீறி நடவடிக்கை 

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், சட்ட விரோதமான கட்டப்பட்ட எம்.எல்.ஏ. விஜய் மிஸ்ராவின் வீடு மற்றும் வணி வளாக கட்டம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சிறப்பு நீதிமன்ற உத்தரவை மீறி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அரசு அதிகாரிகளின் இந்த செயல்பாடுக்கு எம்.எல்.ஏ விஜய் மிஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 தீபாவளி பண்டிகை எதிரொலி - மெழுகுவர்த்தி தயாரிப்பு பணி மும்முரம் 

திரிபுரா மாநில தலைவர் அகர்தலாவில், மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மெழுகுவர்த்தியின் தேவை அதிகமாக இருப்பதால், இந்த பணியில் கூடுதல் நேரம் செலவழிப்பதாக மகளிர் குழுவினர் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் தீபாவளிக்கு நிச்சயம் விற்றுத் தீர்ந்து விடும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

போலீஸை கார் பேனட்டில் இழுத்து சென்ற நபர் 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து போலீஸாரை காரின் பேனட்டில் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முக கவசம் அணியாமல் ஓட்டுநர் வந்ததால், போலீசார், காரை நிறுத்த முயன்ற போது, இந்த நிகழ்வு நடந்துள்ளது. செல்போனில் பதிவான காட்சி அடிப்படையில், கார் ஓட்டுநரை புனே போலீசார் கைது செய்தனர்.

பையில் கிடந்த பச்சிளம் குழந்தை, குடும்பத்தால் குழந்தைக்கு ஆபத்து என கடிதம்

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், பையில் கிடந்த குழந்தையை மீட்ட போலீசார், அதை பராமரிப்பாளர் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அந்த பையில் இருந்த, குழந்தைக்கு தேவையான பொருள், மருந்து, 5 ஆயிரம் ரூபாய் ஆகியன பராமரிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிலிருந்த கடிதத்தில், குடும்பத்தினரால் குழந்தை உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதை எட்டு மாதம் பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. 

இந்திய ராணுவத்தின் 'புல் ஸ்ட்ரைக்' தெரசா தீவில் முப்படை கூட்டுபயிற்சி 

அந்தமான்-நிக்கோபார் கடல்பகுதியில், இந்திய ராணுவத்தின் 'புல் ஸ்ட்ரைக்' பயிற்சி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. தெரசா தீவில் நடைபெற்று வரும் பயிற்சியில், தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை   வீரர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு சவால்களை ஒன்றிணைந்து கையாள்வது, முப்படை ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்காக இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

 'சாகர் கவாச்' ஆபரேஷன் ஒத்திகை ராணுவம், காவலர்கள், மீனவர்கள் பங்கேற்பு 

ஒடிசா மாநிலம் பிரதீப் துறைமுகத்தில், தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையாக 'சாகர் கவாச்' ஆபரேஷன் ஒத்திகை நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் நடைபெறும் பயிற்சியில், இந்திய கடலோர காவல்படை, ஒடிசா, மேற்கு வங்க போலீசார், இரு மாநில வனத்துறையினர், மீனவர்கள் ஒன்றிணைந்து ஒத்திகையில், ஈடுபட்டுள்ளனர். 

 யானைகளை விரட்டியடித்த மாடுகள், தெறித்து ஓடிய காட்டுயானைகள் சுவாரஸ்மான காட்சிகள் வெளியீடு

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சு மாவட்டம் துதியானி வனப்பகுதியில் காட்டுயானைகளை மாட்டு மந்தைகள் விரட்டும் அரிய காட்சி, வெளியாகி உள்ளது. விளை நிலத்திற்குள் நுழைய முயன்ற இரு யானைகளை மாடுகள் ஆக்ரோஷமாக விரட்டியடித்தன. அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்தவர், தனது செல்போனில் படம் பிடித்து, இந்த காட்சிகளை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்