கோவேக்சின் மருந்தில் பக்க விளைவுகள் இல்லை - மனித சோதனையின் முதல் கட்ட ஆய்வில் வெற்றி

கொரோனாவுக்கு எதிராக ஆய்வில் இருக்கும் கோவாக்சின் மருந்து எந்தவித பக்க விளைவுகளை தரவில்லை என முதல் கட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
கோவேக்சின் மருந்தில் பக்க விளைவுகள் இல்லை - மனித சோதனையின் முதல் கட்ட ஆய்வில் வெற்றி
x
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, தெலங்கானாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற மருந்ததை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை அருகே தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக தன்னார்வலர்கள் 30 பேருக்கு செலுத்தப்பட்ட நிலையில், தற்போது 150 பேருக்கு செலுத்தி சோதனை நடைபெற்றுள்ளது. அவர்களது உடல் நிலை 6 மாதங்கள் வரை கண்காணிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே கோவேக்சின் மருந்தால் இதுவரை எவ்வித  பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், பாதுகாப்பானது என்றும் தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்