"50 வயதிற்கு மேற்பட்டோரை கொரோனா பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்" - கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா அதிகாரிகளுக்கு அறிவுரை

ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என, கேரள டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.
50 வயதிற்கு மேற்பட்டோரை கொரோனா பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் - கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா அதிகாரிகளுக்கு அறிவுரை
x
ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என, கேரள டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். கேரள மாநிலம் இடுக்கி அருகேயுள்ள  தொடுபுழா பகுதியில் கேரள காவல்துறையின் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த அஜிதன் என்பவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார். மேலும், கேரளா முழுவதும்  88 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட போலீசார் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 50 வயதிற்கு மேற்பட்ட போலீசாரை கொரோனா பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இயன்றவரை 40 வயதுக்கு உட்பட்ட போலீசாரையும் அதிகாரிகளையும் இப்பணியில் ஈடுபடுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்