"உங்களை வேறுபடுத்திக் காட்டுவது திறன் மட்டுமே" - இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி யோசனை

திறன் ஒன்று தான் உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் என இளைஞர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.
உங்களை வேறுபடுத்திக் காட்டுவது திறன் மட்டுமே - இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி யோசனை
x
உலக இளைஞர் திறன் நாளை முன்னிட்டும், மத்திய அரசு தொடங்கிய திறன் இந்தியா திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு தொடக்க நாளையொட்டியும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இளைஞர்களுக்கு உரையாற்றினார்.  இந்திய இளைஞர்கள் தங்களுடைய திறமையை மேம்படுத்துவதன் மூலம், வேலை வாய்ப்பை பெருக்கும் நோக்கத்தோடு திறன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த நல்ல நாளில் இளைஞர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த பிரதமர் மோடி,  கொரோனா பரவலை தொடர்ந்து வேலை பார்க்கும் முறையில் மாற்றம், பணி முறைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டினார். எப்போதுமே மாறிக்கொண்டு இருக்கும் தொழில் நுட்பமும் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் இளைஞர்கள் இதனை எதிர்க்கொள்ளும் வகையில் புதிய திறன்களை கற்றுக் கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். திறன் என்பது நாம் நமக்கே கொடுத்துக் கொள்ளும் பரிசு என்றும், அது அனுபவத்தால் மட்டுமே அது மேம்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.  காலவரைமுறைக்கு உட்படாதது திறன் என்றும், குறிப்பிட்ட கால அளவில் அது மேன்மேலும் பொலிவு பெறும் என்றும் பிரதமர் கூறினார். திறன் என்பது தனித்துவமானது என்றும், அது மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சந்தையும் வர்த்தகமும் வேகமாக மாறிவரும் நிலையில், நம்மை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்று தம்மிடம் பலர் கேட்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்த கொரோனா காலக்கட்டத்தில் திறன், மேலும் திறனை வளர்த்துக் கொள்ளுதல், மேம்படுத்துதல் தான் ஒரே தாரக மந்திரம் என குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்கள், புத்தகங்களை பார்த்து சைக்கிள் ஓட்ட தெரிந்து கொள்ளலாம் என்றும், சைக்கிள் ஓட்டினால் தான் அதில் நமது திறமை யை வெளிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்த பிரதமர், தெரிந்து கொள்வது அறிவு என்றும், திறன் என்பது செயலில் தான் வரும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்