"24 மணி நேரத்தில் மட்டும் 14,856 நோயாளிகள் குணமடைந்தனர்" - மத்திய சுகாதாரத்துறை தகவல்

தேசிய அளவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் சதவீதம், 60 புள்ளி 77 சதவீதமாக உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் மட்டும் 14,856 நோயாளிகள் குணமடைந்தனர் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
x
தேசிய அளவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் சதவீதம்,  60 புள்ளி 77 சதவீதமாக உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்றில் இருந்து, இதுவரை 4 லட்சத்து, 9 ஆயிரத்து 82 பேர் குணமடைந்துள்ளதாக இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 ஆயிரத்து 856 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 2 லட்சத்து 44 ஆயிரத்து 814 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 21 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில், குணமடைவோர் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட அதிகம் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்