மாஸ்க் அணிந்து கொண்டு பேச சொன்னதால் ஆத்திரம் - பெண் ஒப்பந்த ஊழியரை தாக்கிய சுற்றுலாத் துறை அதிகாரி
பதிவு : ஜூன் 30, 2020, 03:49 PM
ஆந்திராவில் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பேச வேண்டும் என கூறிய பெண் ஒப்பந்த ஊழியரை அரசு சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தாக்கிய வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாநில சுற்றுலாத்துறை விடுதியில் துணை மேலாளராக இருப்பவர் பாஸ்கர் ராவ். அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்ப்பவர் உஷாராணி. வேலை விஷயமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த போது மாஸ்க் அணிந்துவிட்டு பேசுங்கள் என பாஸ்கர் ராவிடம் உஷாராணி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர்  ராவ், அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே உஷாராணியின் தலைமுடியை பிடித்து அடித்து கீழே தள்ளினார். இதில் அந்த  பெண் அலறித் துடித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார், பாஸ்கர் ராவ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அமைச்சருக்கு நெருங்கிய தொண்டர் கொலை - சிசிடிவி காட்சிகளை கொண்டு 4 பேரை தேடும் பணி தீவிரம்

ஆந்திராவில் அமைச்சருக்கு நெருங்கிய தொண்டர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

1144 views

போலீசார்- அதிமுக முன்னாள் எம்.பி. மோதல் விவகாரம் - முன்னாள் எம்.பி. அர்ஜூனன் மீது இரு பிரிவுகளில் வழக்கு

போலீசாருடன் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. அர்ஜூனன் மீது இரு பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

24 views

பிற செய்திகள்

பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை திறப்பு குறித்து உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி,கோவிலின் பாதாள அறை திறப்பு குறித்து, உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.

126 views

விகாஸ் துபே என்கவுன்டர் வழக்கு - பாதுகாப்பு கேட்டு கைது செய்யப்பட்ட எஸ்.ஐ மனு

விகாஸ்துபே என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் கே.கே.சர்மா தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.

1540 views

தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ் ஸ்வப்னாவுடன் இருந்த சந்தீப் நாயரும் கைது

கேரள தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நிலையில் ஸ்வப்னா, சந்தீப் நாயர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

282 views

கர்நாடகா : உதவித்தொகை வழங்க கோரி மாணவர்கள் போராட்டம்

கர்நாடகா மாநிலம் தவனகெரேவில் உதவித்தொகை வழங்க கோரி ஜெ.ஜெ.எம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

31 views

"இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதே?" - மோடி ஆட்சி குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

42 views

நடிகை ரேச்சல் வைட்டுக்கு கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

488 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.