"37 லட்சம் ரேபிட் கிட் கருவி விரைவில் வரும்" - மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல்

இந்தியாவில் மேலும் ஆயிரத்து 211 பேருக்கு கொரோனா கண்டுயறிப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது.
37 லட்சம் ரேபிட் கிட் கருவி விரைவில் வரும் - மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல்
x
டெல்லியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், சுகாதாரத் துறை மற்றும், உள்துறையை சேர்ந்த செயலாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இந்திய மருத்துவக் ஆராய்ச்சி கழக இயக்குநர் ராமன் ஆர்.கங்ககேத்கர், மருத்துவ கவுன்சிலின் 166 ஆய்வகங்களிலும், 70 தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருவதாக கூறினார். கொரோனா சோதனை மேற்கொள்ள 6 வாரங்களுக்கு தேவையான உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், 37 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் இந்தியாவிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து பேசிய, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால்,நாடு முழுவதும், இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 902 பேரின் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதுவரை ஆயிரத்து 36 பேர் குணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்