ஈரானில் சிக்கிய ஷியா யாத்ரீகர்கள் : தொடர்ந்து கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்றது.
ஈரானில் சிக்கிய ஷியா யாத்ரீகர்கள் : தொடர்ந்து கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
x
ஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்றது. அப்போது, மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே பலருக்கு நோய் அறிகுறியே இல்லாமல் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார். விசாரணையின் முடிவில், ஷியா யாத்திரீகர்களின் நிலையை  இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணிக்க, வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விரைவில் அவர்களை, இந்தியா அழைத்து வருவது குறித்த முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்