"காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் கோவிலுக்கு வர வேண்டாம்" - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

காய்ச்சல், சளி தும்மல், இருமல் உள்ள பக்தர்கள் தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் கோவிலுக்கு வர வேண்டாம் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
x
உலகம் முழுவதும் பரவும் கோரானா வைரஸ் அபாயம் காரணமாக திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருமலைக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும், அடிக்கடி கை கழுவ அதற்கான உபகரணங்களை கொண்டு வர வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறி இருப்பவர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏதாவது நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பதி கூடுதல் முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்