பாரதியார் பாடிய 'குயில்தோப்பு' ஆக்கிரமிப்பு? : 11- பேர் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு

புதுச்சேரியில் பாரதியார் பாடிய குயில்தோப்பு இடத்தை, போலி பத்திரம் தயாரித்து பதிவு செய்ததாக 11 பேர் மீது, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாரதியார் பாடிய குயில்தோப்பு ஆக்கிரமிப்பு? : 11- பேர் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு
x
கருவடிக்குப்பத்தில் உள்ள, தனியாருக்குச் சொந்தமான பாரதியார் பாடிய குயில்தோப்பு இடத்தை, போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக குற்றம் சாட்டு எழுந்தது. இந்த இடத்துக்கான பவர் அதிகாரம், சீனிவாசமூர்த்தி என்பவரிடம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெயரிலிருந்து வேறு ஒருவர் பெயருக்கு இடத்தை மாற்றி பதிவு செய்ததாக அவர் புகார் அளித்தார். இது குறித்து, சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்போது, கோபிநாத், ராணி, அசோக், பானுமதி ஆகிய 11 பேர், போலி ஆவணம் தயாரித்து, வேறு பெயருக்கு இடத்தை மாற்றியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ராணி என்பவர் புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவி என்றும், பானுமதி  தாசில்தார் என்பதும் தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்