ரயில் படிக்கட்டில் தொங்கிய படி சாகசம் செய்த இளைஞர் - பாலத்தின் தடுப்புக் கம்பியில் மோதி பலியான சம்பவத்தால் பரபரப்பு

கடந்த 26ஆம் தேதி மும்பையில் உள்ளூர் ரயில் ஒன்றில் பயணம் செய்த 20 வயதான தில்ஷன் என்ற இளைஞர் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் செய்து வந்தார்.
ரயில் படிக்கட்டில் தொங்கிய படி சாகசம் செய்த இளைஞர் - பாலத்தின் தடுப்புக் கம்பியில் மோதி பலியான சம்பவத்தால் பரபரப்பு
x
கடந்த 26ஆம் தேதி மும்பையில் உள்ளூர் ரயில் ஒன்றில் பயணம் செய்த 20 வயதான தில்ஷன் என்ற இளைஞர் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் செய்து வந்தார். இதனை அவர் நண்பர் செல்போனில் படம் எடுத்த நிலையில் திடீரென ஆற்றுப்பாலத்தில் மோதிய தில்ஷன் சம்பவ இடத்திலேயே பலியானார். அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த விபத்து காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இதனிடையே ஓடும் ரயிலில் யாரும் சாகசம் செய்ய வேண்டாம் என்றும் அது சட்டவிரோதமானது என இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய ரயில்வே, பாதுகாப்பை பொருட்படுத்தாமல் ரயிலில் இருந்து இறங்குவது, ஓடும் ரயிலில் ஏறுவது சட்டவிரோதமானது என்றும் எச்சரித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்