முத்தலாக் - பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித்தொகை - ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்க உ.பி. அரசு திட்டம்

உத்தரபிரதேசத்தில் முத்தலாக் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அம்மாநில அரசு உதவித்தொகை வழங்க உள்ளதாகா தகவல்கள் வெளியாகியுள்ளன.
முத்தலாக் - பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித்தொகை - ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்க உ.பி. அரசு திட்டம்
x
உத்தரபிரதேசத்தில்  முத்தலாக் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அம்மாநில அரசு உதவித்தொகை வழங்க உள்ளதாகா தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மூன்று மாதத்துக்குள் இந்த திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது தொடர்பாக ஷியா பிரிவு மக்களின் மவுலான சயிப் அப்பாஸ் கூறுகையில், 500 ரூபாய் உதவித்தொகை கொடுப்பதைவிட  குழந்தைகள், பெண்களுக்கான கல்விக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 500 ரூபாய் கொடுப்பதன் மூலம் அரசு நீதியை நிலை நாட்டிவிட முடியாது என சன்னி பிரிவு தலைவர் மவுலான சுபியான் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்