உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி காலமானார் - பிரதமர் மோடி, எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல்

கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி காலமானார்.
உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி காலமானார் - பிரதமர் மோடி, எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல்
x
1931ஆம் ஆண்டு ராமகுஞ்சா என்ற ஊரில் பிறந்த அவர், தனது 8வது வயதில் சன்னியாசம் பூண்டார். 88 வயதான மடாதிபதி, கடந்த 20ஆம் தேதி அதிகாலை முதல், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இந்நிலையில் இவரது மறைவுக்கு, பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காலமான மடாதிபதி,  அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலருக்கும் நெருக்கமாக இருந்து வந்தவர் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்