உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : குற்றவாளி செங்காருக்கு ஆயுள் தண்டனை

உன்னாவ் பாலியல் வழக்கில், குற்றவாளியான குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
x
உன்னாவ் பாலியல் வழக்கில், குற்றவாளியான குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில், பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட குல்தீப் சிங் செங்கார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கான தண்டனை விவரத்தை டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மேஷ் சர்மா அறிவித்தார். மேலும், ஆயுள் தண்டனை மற்றும் 25 லட்சம் ரூபாய் அபராத தொகை செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, அந்த தொகையில் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் ஓராண்டுக்கு டெல்லியில் உள்ள மகளிர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள குடியிருப்பில் வசிக்க வேண்டும் என்றும் சிபிஐ அதிகாரிகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று  கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்