அமெரிக்க அதிபருடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு : "பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது" - ராஜ்நாத்சிங்

அமெரிக்கா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.
அமெரிக்க அதிபருடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு : பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது - ராஜ்நாத்சிங்
x
இந்திய - அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டாவது பேச்சுவார்ததை வாஷிங்டன்னில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ, பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், சந்திப்பு பயனுள்ள வகையில் இருந்ததாகவும், பாதுகாப்பு, ராணுவம், நல்லுறவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். பாகிஸ்தான், ஆப்கான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் நிலவும் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதகாவும் அவர் கூறினார். 

இதனைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ராஜ்நாத்சிங் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினர்.


Next Story

மேலும் செய்திகள்