மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

பாஜக பெண் எம்பி பிரக்யா சிங் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்
x
பாஜக பெண் எம்பி பிரக்யா சிங் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கோட்சேயை தேச பக்தர் என கூறிய நாள் கருப்பு நாள் என ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாத்மா காந்தி, தங்களுக்கும் தேசப்பிதா தான் என கூறினார். பிரக்யாவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். எனினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்