நைஜீரிய நாட்டு முதியவரிடம் சிக்கிய ஆதார் அட்டை : போலீசார் விசாரணை

புதுச்சேரி அருகே நைஜீரியா நாட்டை சேர்ந்த முதியவருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நைஜீரிய நாட்டு முதியவரிடம் சிக்கிய ஆதார் அட்டை : போலீசார் விசாரணை
x
புதுச்சேரி அருகே நைஜீரியா நாட்டை சேர்ந்த முதியவருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி அருகே உள்ள காலாப்பட்டு பகுதியில் பழிக்கு, பழி வாங்கும் வகையில் கொலைகள் தொடர்ந்து வருவதால், போலீசார், அங்குள்ள மக்களின் பின்புலம் குறித்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி சுனாமி குடியிருப்பில், தங்கியிருந்த மோசஸ் என்றநைஜீரியா நாட்டை சேர்ந்த முதியவர் தன்னுடைய நைஜீரிய நாட்டு ஆவணங்களை போலீசாரிடம் காட்டியுள்ளார். அப்போது அவர் பெயரில் இருந்த ஆதார் அட்டையும் சிக்கியது. 30 ஆண்டுகளாக அவர் இங்கு வாழ்வதால், ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்