அயோத்தி வழக்கு : "வதந்திகளை நம்ப வேண்டாம்" - உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
பதிவு : நவம்பர் 09, 2019, 07:22 AM
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமைதி காக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை என்றும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஆதித்ய நாத் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

"கேரளாவில் உள்ள தமிழக மக்கள் வெளியேற வேண்டாம்" - கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ள மக்கள், ஏப்ரல் 14 ஆம்தேதி வரை கேரளாவிலேயே இருக்க வேண்டும் என அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி வலியுறுத்தி உள்ளார்.

620 views

ஏழை மக்களுக்கு டெல்லி அரசு உணவு விநியோகம்

டெல்லியில் உள்ள 600 பள்ளிகள் மூலம் தேவைப்படும் மக்களுக்கு அம்மாநில அரசு உணவு விநியோகம் செய்து வருகிறது.

18 views

மேற்குவங்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கு அர்ஜூன் என்ற பெயரில் சிறப்பு ரயில் இயக்கம்

மேற்குவங்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கு அர்ஜூன் என்ற பெயரில் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.

14 views

ஊரடங்கு உத்தரவை மீறி நடமாட்டம் - 1,866 பேர் கைது

உத்தராகண்ட் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்து 866 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

11 views

ஏழைகளுக்கு உணவு வழங்கிய ரயில்வே பாதுகாப்பு படையினர்

பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழை, எளிய மக்களுக்கு,ரயில்வே கேண்டினில் தயாரிக்கப்பட்ட உணவை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விநியோகம் செய்தனர்.

12 views

"பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி வழங்க உள்ளனர்" - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு தாமும், ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அனகாடியும் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.