7-வது ஊதிய குழு பரிந்துரை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவின் பரிந்துரைகளை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளர்.
7-வது ஊதிய குழு பரிந்துரை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு
x
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவின் பரிந்துரைகளை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளர். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370 பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்  யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் நான்கரை லட்சம் அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். உயர்த்தப்பட்ட புதிய ஊதியம் வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லதாக் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைக்கு வரும்.


Next Story

மேலும் செய்திகள்