நாராயணசாமி - கிரண்பேடி இடையே டிவிட்டரில் மோதல்

புதுச்சேரியில் பிரசாரத்தின்போது, முதலமைச்சர் நாராயணசாமி, இருசக்கரவாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.
நாராயணசாமி - கிரண்பேடி இடையே டிவிட்டரில் மோதல்
x
புதுச்சேரியில் பிரசாரத்தின்போது, முதலமைச்சர் நாராயணசாமி, இருசக்கரவாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். இந்த படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் மீது  புதுச்சேரி டிஜிபி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக, கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் பயணித்த படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் நாராயணசாமி,  ஒரு கருத்தை கூறும் முன்பு தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சாலை விதியை மீறிய கிரண்பேடி மீது புதுச்சேரி டிஜிபி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்