குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கு

நாட்டின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகவும், பிரதமரின் நடவடிக்கையை சிறுமைப்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு உள்ளது.
குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கு
x
குழு வன்முறையை தடுத்து நிறுத்தக் கோரி 50 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். எதிர்ப்பு குரல் இல்லாத ஜனநாயகம் இல்லை என்றும்  இஸ்லாமியர்கள், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களை குழுவாக சென்று தாக்கி கொலை செய்வதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். ஜெய் ஸ்ரீராம் முழக்கம் தற்போது ஆத்திரமூட்டும் போர்க்குரலாக மாறி வருவதாகவும் அதில் வேதனை தெரிவித்திருந்தனர். இந்த கடிதம் பிரதமரின் நடவடிக்கையை சிறுமைப்படுத்துவதாகவும் நாட்டின் கண்ணியத்தை சிதைப்பதாகவும் , பிரிவினையை தூண்டும் வகை​யில் உள்ளதாகவும் பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா தொடர்ந்த வழக்கு அடிப்படையில், போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்