ஆந்திராவில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீடுகளில் சோதனை - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

ஆந்திராவை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ​​ஒழிப்பு சோதனையில், 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீடுகளில் சோதனை -  லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
x
கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சிவபிரசாத் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெறும் சோதனையில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கர்னூலில் உள்ள அவரது வீட்டில் இருந்து  ஒரு கிலோ தங்கம், ஒன்றரை லட்சம் ரொக்கம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் ஐதராபாத் மற்றும் உகாண்டா நாட்டில் சிவபிரசாத் வங்கி லாக்கர் வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்