வரும் 30 தேதி முதல் பிரம்மோற்சவம் - விழா நடத்த ரூ.7.53 கோடி நிதி ஒதுக்கீடு

திருப்பதியில், புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்த 7 கோடி 53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, விழாக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.
வரும் 30 தேதி முதல் பிரம்மோற்சவம் - விழா நடத்த ரூ.7.53 கோடி நிதி ஒதுக்கீடு
x
திருப்பதியில், புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்த 7 கோடி 53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, விழாக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. இது குறித்து பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், விழாவை பார்க்க வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்றார். பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க 300 சிசிடிவி கேமராக்கள், 45 மருத்துவர்கள் கொண்ட ஆறு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், பிரம்மோற்சவத்தின் போது, லட்டு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஏழு லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அனில்குமார் சிங்கால் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்