விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் ப.சிதம்பரம் மனு : நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல்

விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுக்காமல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.
விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் ப.சிதம்பரம் மனு : நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல்
x
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ காவலுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்த தாக்கல் செய்த மனு தொடர்பாக சி.பி.ஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ப.சிதம்பரம் தாக்கல் செய்த  மனு இங்கு விசாரிக்க உகந்தது அல்ல என்றும், தன்னுடைய சி.பி. ஐ. காவலை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என்றும் சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. ப.சிதம்பரம் தரப்பு, நீதிமன்ற நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றும், சிதம்பரத்தின் தாக்கல் செய்த மனு மீது, அவருக்கு சாதகமாக உத்தரவு கொடுத்தால் அது தவறான ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்பது தான் நடைமுறை என்றும், மேலும் ஒவ்வொரு நாளும் போலீஸ் காவல் தொடர்பாக பல வழக்குகள் வருகின்றன என்றும் சுட்டிக்காட்டி உள்ள சி.பி.ஐ., சிதம்பரத்துக்கு சாதகமாக ஒருவேளை இந்த உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தால் அதை ஒரு காரணமாக வைத்து, பல வழக்குகள் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.  தவறான முன்னுதாரணத்துக்கு  வழி வகுக்காமல், ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவில் கோரியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்