புதுச்சேரியில் வீடுகளில் விநோத குறியீடு - மக்கள் அச்சம்

புதுச்சேரி நகரில் வீடுகளில் வினோத குறியீடு வரையப்பட்டிருந்த நிலையில், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் வசிக்கும் ரெயின்போ நகர் பகுதியில் புதியதாக சிசிடிவி கேமரா பொருத்தம் பணியை காவல்துறை தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் வீடுகளில் விநோத குறியீடு - மக்கள் அச்சம்
x
புதுச்சேரி நகரில் வீடுகளில் வினோத குறியீடு வரையப்பட்டிருந்த  நிலையில், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் வசிக்கும் ரெயின்போ நகர் பகுதியில் புதியதாக  சிசிடிவி கேமரா பொருத்தம் பணியை காவல்துறை தொடங்கியுள்ளது.  புதுச்சேரி சாரம் பகுதியில்  12 வீடுகளில் மனித பொம்மை வடிவில் வினோத குறியீடு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், கொள்ளை அடிப்பதற்காக வடமாநில கும்பல் அடையாளம் காட்டுவதற்கு வரைந்ததாக எண்ணி அச்சம் அடைந்தனர்.  மக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும்  புதுச்சேரி  ரெயின்போ நகர் குடியிருப்போர் சார்பில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
 

 
 


Next Story

மேலும் செய்திகள்