காஷ்மீருக்கான அடையாளத்தை பாதுகாக்க ஒன்றுபடுவோம் : முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கருத்து

காஷ்மீர் மாநிலத்தில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என பரூக் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஷ்மீருக்கான அடையாளத்தை பாதுகாக்க ஒன்றுபடுவோம் : முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கருத்து
x
காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விரைவில் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இணையதள சேவை முடக்கிவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரையும், லடாக்கையும் தனியாக பிரித்து, யூனியன் பிரதேசமாக அறிவிக்கவும், ஜம்முவை தனி மாநிலமாக தக்கவைக்கவும், மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக  தகவல் வெளியானதால், அங்கு அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. 

இந்த விவகாரம் குறித்து  காஷ்மீர் மாநில அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலை இருநாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசு எந்த நிலைப்பாடு எடுத்தாலும், காஷ்மீருக்கான அடையாளத்தை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படும் என கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக ஃபரூக் அப்துல்லா கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்