"நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களை மீட்டு, தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
x
அரேபியாவுக்கு ஸ்டெனா இம்பீரோ கப்பலில் சென்றபோது நடுக்கடலில் 1 தமிழர் உட்பட 18 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் உள்ள ஒரு தமிழரை மீட்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 18 இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தெஹ்ரானில் உள்ள நமது தூதரக அதிகாரிகள் மாலுமிகளைச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். 18 பேரும் நலமாக இருப்பதாக கூறியுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், 18 பேரையும் தாயகம் மீட்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்