இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - புதுச்சேரி கடற்பகுதியில் ரோந்து பணி தீவிரம்

இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலியாக புதுச்சேரி கடற்பகுதியில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - புதுச்சேரி கடற்பகுதியில் ரோந்து பணி தீவிரம்
x
இலங்கை குண்டு வெடிப்பு  எதிரொலியாக புதுச்சேரி கடற்பகுதியில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் கடல் வழியாக தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக சந்தேகப்படும் நிலையில், இந்திய கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து புதுச்சேரி கடற்படை போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் கூட்டாக இணைந்து  புதுச்சேரி கடற்பகுதியில்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்