ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக மணல் கடத்தல்...

ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 10 லாரிகளை கனிமவளத்துறையினர் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக மணல் கடத்தல்...
x
ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 10 லாரிகளை கனிமவளத்துறையினர் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழகத்திற்கு சட்டவிரோதமாக மணல் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கனிமவளத்துறை அதிகாரி சீனிவாசராவ் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஆந்திர எல்லை பகுதியில் கனிமவளத்துறையினர் வாகன சோதனையில்   ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமான 10 லாரிகளை கனிமவளத்துறையினர் மடக்கினர். லாரிகளை சோதனையிட்ட போது, சட்டவிரோதமாக சென்னைக்கு மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. லாரிகளை பறிமுதல் செய்த கனிமவளத்துறையினர், அதனை கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்