பெண்களின் நலனுக்கானது முத்தலாக் தடை மசோதா - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

பெண்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது தான் முத்தலாக் தடை மசோதா என, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
பெண்களின் நலனுக்கானது முத்தலாக் தடை மசோதா - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
x
பெண்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது தான்   முத்தலாக் தடை மசோதா என, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். மக்களவையில் இதுதொடர்பான மசோதாவை தாக்கல் செய்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசும்போது,  முத்தலாக் மசோதா எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்றும், பெண்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் 20 நாடுகள் முத்தலாக் முறைக்கு தடை விதித்துள்ளதாகக் தெரிவித்த அவர், அப்படி இருக்கும்போது, மதச்சார்ப்பாற்ற நாடான இந்தியாவில் இந்த சட்டத்தை ஏன் கொண்டு வரக்கூடாது எனக் அவர் கேள்வி எழுப்பினார். இந்தச் மசோதாவை, கட்சிகள் அரசியல் ரிதீயாக அணுகக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக முத்தலாக் மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்