பா.ஜ.க. முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ராஜினாமா

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ராஜினாமா
x
மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. போபாலில் செய்தியாளர்களை சந்தித்த, தற்போதைய முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் இந்த தகவலை தெரிவித்தார். ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை, தங்கள் கட்சிக்கு இல்லை எனவும், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிப்பதாகவும் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகை சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக கூறிய சிவராஜ் சிங் சவுகான், காங்கிரசை சேர்ந்த கமல்நாத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்