"சபரிமலை பிரச்சினையை கையாளும் விதம் சரியில்லை" - அமித் ஷா

சபரிமலை விவகாரத்தில் அடக்குமுறையால் நம்பிக்கையை அடக்க அனுமதிக்க முடியாது என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சபரிமலை பிரச்சினையை கையாளும் விதம் சரியில்லை - அமித் ஷா
x
கேரள தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் இருந்து சபரிமலையை கைப்பற்ற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக, கேரள மாநிலம் மலப்புரத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, சபரிமலை பாரம்பரியத்தை பாதுகாக்க ஒவ்வொரு அய்யப்ப பக்தர்கள் எடுக்கும் முயற்சிக்கு பின்னாலும் பா.ஜ.க. உறுதியுடன் இருக்கும் என தெரிவித்துள்ளார். சபரிமலையில், குப்பைத் தொட்டிக்கு அருகே பக்தர்கள் உறங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக செய்திகள் வருவதாகவும், பக்தர்களை இதுபோன்று நடத்தக் கூடாது என்பதை பினராயி விஜயன் உணரவேண்டும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். 

மக்களின் நம்பிக்கையை  அடக்குமுறைகளால் அடக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ள அமித் ஷா, உணர்வு பூர்வமான பிரச்சனையை பினராயி அரசு கையாளும் விதம் அதிருப்தி அளிப்பதாகவும் கூறியுள்ளார். அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் இளம் பெண்களை சபரிமலை யாத்திரை செல்ல கேரள அரசு கட்டாயப்படுத்துவதாகவும் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளா​ர். 

Next Story

மேலும் செய்திகள்