சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் மீதே சிபிஐ வழக்கு பதிவு..!

லஞ்சப் புகார் எதிரொலியாக சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் மீதே சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் மீதே சிபிஐ வழக்கு பதிவு..!
x
ஹைதராபாத்தைச் சேர்ந்த சதீஷ் பாபு என்பவருக்கும், பல்வேறு முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கும் தொடர்பிருப்பதாக தகவல் வந்ததால் அவருக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தநிலையில், சிபிஐ விசாரணையை தவிர்ப்பதற்காக, தான் சிலருக்கு லஞ்சம் கொடுத்ததாக சிபிஐக்கு, சதிஷ் பாபு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். துபாயைச் சேர்ந்த சோமேஷ் பிரசாத் என்பவர் சிபிஐ சிறப்பு புலனாய்வு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவின் வாட்ஸ் அப் புகைப்படத்தைக் காட்டி தனக்கு சிபிஐ அதிகாரிகளை தெரியும் என்றும் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தால் விசாரணையில் இருந்து தப்பிக்க வைப்பேன் என்றும் தெரிவித்ததாக சதீஷ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து, 2 கோடியே 95 லட்சம் ரூபாயை சோமேஷிடம் கொடுத்ததாகவும் ஆனால் அதன் பிறகும் தனக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியதாகவும் சதீஷ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 2 கோடி ரூபாயை கொடுத்தால் தான் வழக்கில் இருந்து விடுவிக்க வைக்க முடியும் என்று சோமேஷ் தன்னிடம் சொன்னதாகவும் சதீஷ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார் கடிதத்தின் அடிபபடையில் சிபிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரி ராகேஷ் அஸ்தானா டிஎஸ்பி தேவேந்திர குமார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்