கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
கர்நாடகாவில் பெங்களூரு, மாண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என கர்நாடக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இதற்கிடையே, அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் லட்சத்தீவு, கேரளா மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என பெங்களூரு வானிலை ஆய்வு மைய தலைவர் கீதா அக்னி புத்திரி தெரிவித்துள்ளார். மீனவர்கள் அரபிக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்